கொரோனா இரண்டாவது அலை வேகம்… டாஸ்மாக் கடைகளை முழுவதும் மூடவேண்டும் –நீதிமன்றத்தில் வழக்கு!
கொரோனா பராவலை தடுக்க டாஸ்மாக் கடைகளை முழுவதுமாக மூடவேண்டும் என மதுரை நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவை முன்னிட்டு லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் திரையரங்குகள், மத வழிபாட்டு தலங்கள், ஷாப்பிங் மால்கள் என அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் மக்கள் அதிகமாகக் கூடும் டாஸ்மாக் கடைகளுக்கு மட்டும் எந்த விதமான தடையும் விதிக்கப்படவில்லை. இந்நிலையில் மதுரை நீதிமன்றக் கிளையில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் என திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கின் விசாரணை நாளை விசாரணைக்கு வர உள்ளது.