புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 8 ஜூன் 2019 (20:05 IST)

’தனுஷ் பட நடிகை’ கிரிக்கெட் வீரருடன் காதலா ?

இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய பந்துவீச்சாளர்களில் ஒருவர் பும்ரா. இவர் தற்போது உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடி பந்துவீசி வருகிறார்.
இந்நிலையில் பும்ரா பற்றி ஊடகங்களில் ஒருதகவல்  பரவிவருகிறது.ஆம் ! பிரேமம் படத்தில் நடிகர் நிவின் பாலினுடன் இணைந்து நடித்தவர் நடிகை அனுபமா. அவர் தனுஷுடன் சேர்ந்து கொடி என்ற படத்தில் நடித்தார். தற்போது அனுபமா மலையாள படங்களில் நடித்துவருகிறார்.
 
இந்நிலையில் அனுபமாவுக்கும், கிரிக்கெட் வீரர் பும்ராவுக்கும்  காதல் என சமூக ஊடகங்களில் தகவல் பரவிவருகிறது.
 
மேலும், டுவிட்டர் பக்கத்தில், பும்ரா ஃபாலோ செய்யும் 25 பேர்களில் அதிகமாக உள்ளது கிரிக்கெட்வீரர்கள் . அதுதவிர அவர் பாலோ செய்யும் ஒரே நடிகை அனுபமா தான்.

அதுதான் இருவரது ரசிகர்களிடையேயும் இந்த சந்தேகத்தைத் தோற்றுவித்துள்ளதாகத் தகவல் வெளியானது.

இப்படி இருக்க அனுபமாவும் தனது டுவிட்டர் பக்கத்தில்  பும்ராவை ஃபாலோ செய்து அவர் பதிவிடும் கருத்துக்களுக்கு லைக்போட்டு ஷேர் செய்து வருவதால் இருவருக்கும் காதல் இருக்கலாம் என்று நெட்டிஷன்கள் தெரிவித்துவருகின்றனர்.