புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தடையற தாக்க நடிகை.! அவரே வெளியிட்ட கோரமான புகைப்படம் இதோ!

Last Updated: திங்கள், 11 பிப்ரவரி 2019 (18:48 IST)
பிரபல மலையாள  நடிகை மம்தா மோகன் தாஸ் 10 வருடங்களுக்கு முன்பு தான் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டிருந்த புகைப்படத்தை தற்போது வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார். 


 
‘மாயோகம்’ என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் நடிகை மம்தா மோகன் தாஸ். அதற்கு பிறகு விஷாலுடன் சிவப்பதிகாரம், மாதவனுடன் குரு என் ஆளு, அருண் விஜயுடன் தடையற தாக்க உட்பட பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். 
 
மேலும் நடிப்பையும் தாண்டி மலையாளம் மற்றும் தமிழில் படங்களில் பாடல்களை பாடியுள்ளார். குறிப்பாக சிம்பு நடித்த காளை படத்தில் ‘காள காள’ என்ற பாடலையும் விஜய் நடித்த வில்லு படத்தில் ‘டாடி மம்மி’ பாடலையும் இவர் தான் பாடினார். 
 
இருந்தாலும் தமிழில் இவருக்கு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பட வாய்ப்புகள்  கிடைக்கவில்லை இதற்கிடையில் இவருக்கு 2011 ஆம் ஆண்டு ப்ரஜித் பத்மநாபன் என்பவருடன் திருமணம் நடந்தது . ஆனால் அந்த மணவாழ்க்கை நீண்டநாள் நீடிக்கவில்லை காரணம்  இவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர் என்பதால் இவரை விவாகரத்து செய்துவிட்டார் ப்ரஜித் . 


 
இந்நிலையில் தற்போது , 10 வருடங்களுக்கு முன்  தான் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டிருந்த அந்த புகைப்படத்தை #10yearschallenge என்று குறிப்பிட்டு வெளியிட்டுள்ளார்.  மொட்டை தலையில் இருக்கும் ஒரு புகைப்படத்தையும்  தற்போது நோயிலிருந்து மீண்டுள்ளதாக மற்றொரு புகைப்படத்தையும்  பதிவிட்டுள்ளார். இதனை கண்ட பலரும் ஷாக் ஆகியுள்ளனர். 


இதில் மேலும் படிக்கவும் :