திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 11 பிப்ரவரி 2019 (18:16 IST)

ஸ்லிம்மான தோற்றத்தில் கியூட் கீர்த்தி சுரேஷ்! வைரலாகும் புகைப்படங்கள்!

நடிகை கீர்த்தி சுரேஷ்  திடீரென உடல் எடையை குறைத்து மிகவும் ஸ்லிம்மான தோற்றத்துக்கு மாறியுள்ளார். 


 
தமிழ் சினிமாவில்  வளர்ந்து வரும் நடிகைகளுக்கு சவாலாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவரின் பிரமிக்கத்தக்க நடிப்பில் தெலுங்கில் வெளியான மகாநதி படம் கீர்த்தி சுரேஷை  வளர்ச்சியின் உச்சத்திற்கு கொண்டு சென்றது.
 
அதே போன்று தமிழில் முன்னணி ஹீரோக்களான விஜய், விஷால், சூர்யா, சிவகார்த்திகேயன் என அனைத்து முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்துவிட்டார் கீர்த்தி சுரேஷ் . நடிக்க வந்த குறுகிய காலத்திலேயே சிவகார்த்திகேயனைப் போன்று தனது திறமையால் அசைக்க முடியாத இடத்திற்கு சென்றுவிட்டார். மேலும் தளபதி  விஜய்யுடன் சேர்ந்து இவர்  நடித்த சர்கார் படம் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றது . 
 
இந்நிலையில் சமீபத்தில் போட்டோ ஷூட் ஒன்றை நடத்திய கீர்த்திசுரேஷ், தன்  உடல் எடையை குறை ஸ்லிம்மாக தோற்றமளித்துள்ளார்.  அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.