செளந்தர்யா திருமணத்தில் ஒதுங்கி நின்ற தனுஷ்: ரஜினி காரணமா?

Last Updated: திங்கள், 11 பிப்ரவரி 2019 (15:45 IST)
நடிகர் ரஜினிகாந்த்தின் இரண்டாவது மகள் செளந்தர்யா - விசாகன் மறுமணம் நல்ல படியே நடந்து முடிந்தது. இந்த திருமண விழாவிற்கு அரசியல் கட்சி தலைவர்களும், நடிகர்களும் பங்கேற்றனர். 
 
இந்நிலையில், இவர்களது திருமணத்தின் மற்றொரு பகுதியகாக தனுஷை பற்றிய பேச்சும் அதிக அளவில் உள்ளது. ஆம், செளந்தர்யா திருமண வரவேற்பில் தனுஷ தாமதமாக பங்கேற்றார். அதோடு, நர்மலாகவும் டல்லாகவும் காணப்பட்டார்.
 
அடுத்து இன்று திருமணத்தில் பங்கேற்றாலும், குடும்பத்தினருடன் சேர்ந்து புகைப்படங்கள் எடுத்துக்கொள்ளவில்லை, பலரிடமும் சகஜமாக பேசாமல் ஒதுங்கி இருந்ததாக கூறப்படுகிறது. தனுஷ் ஏன் இப்படி இருந்தார் என சில தகவல்கள் வெளியாகியுள்ளது. 
தனுஷ் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பில் பிசியாக இருந்ததால் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு லேட்டாக வந்தாராம். அதோடு, அந்த படத்திற்கான அவரது கெட் அப் வெளியே பரவி விட கூடாது என்ற காரணத்திற்காக அதிக புகைப்படங்களும் எடுத்துக்கொள்ளவில்லையாம். 
 
ரஜினிகாந்திற்கு தொழில் பக்தி அதிகம். இதை அவர் பின்பற்றி வருகிறார். எனவே, தனுஷும் தொழில் பக்தி அதிகம் உள்ளவராக உள்ளார். அதனால்தான் திருமண கொண்டாட்டங்களில் ஓரமாக நின்றிருக்கிறார் என செய்திகள் தெரிவிக்கின்றன. 


இதில் மேலும் படிக்கவும் :