நடிகை தமன்னா கொரோனாவிலிருந்து குணமடைந்தார் ! ரசிகர்கள் மகிழ்ச்சி
நடிகை தமன்னாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் அவர் இன்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தனது பெற்றோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக தமன்னா தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இதையடுத்து தமன்னாவுக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு. ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்தார்.
அவர் மருத்துவமனையில் அவருக்கு சிறப்பாக சிகிச்சை அளிப்பட்டதை அடுத்து அவர் விரைவிலேயே குணமடைந்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :
கடந்த ஒரு வாரமாக நான் பலவித சிரமங்களைச் சந்தித்தாலும் இத்தொற்றிலிருந்து மீண்டுவிடுவேன் என்று நினைத்தேன். அதனால் என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டேன். நீங்களும் பாதுகாப்புடன் இருங்கள் என்று தெரிவித்துள்ளார்.
இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.