விஜய்க்கு சொன்ன கதை தெரிந்தும் அஜித் ஓகே சொன்னது எப்படி ? சுதா கொங்கரா பட அப்டேட்!

Last Modified வியாழன், 10 செப்டம்பர் 2020 (17:05 IST)

சமீபத்தில் இயக்குனர் சுதா கொங்கரா அஜித்தை சந்தித்து கதை சொல்லி அதில் நடிக்க சம்மதம் வாங்கியுள்ளார்.

அஜித் நடிப்பில் போனிகபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’வலிமை’ இந்த படத்தில் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்குவதற்குள் கொரோனா காரணமாக ஊரடங்கு வந்து விட்டதால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் இப்போது அஜித் தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.

இந்நிலையில் தனது அடுத்த படத்துக்காக இரு தமிழ் இயக்குனர்களிடம் தன் வீட்டில் வைத்தே இயக்குனர் சுதா கொங்கராவிடம் கதை கேட்டு அதை ஓகே செய்துள்ளார் அஜித். இந்த கதை சுதா ஏற்கனவே விஜய்க்காக சொன்ன கதை என சொல்லப்படுகிறது.

இந்த கதை விஜய்க்காக உருவாக்கப்பட்ட கதை என்று தெரிந்தும் அதில் சில மாற்றங்களை மட்டும் செய்ய சொல்லி அஜித் ஓகே சொல்லியுள்ளாராம். நடிக்க வந்த ஆரம்பத்தில் அஜித் நடிக்கவேண்டிய சில படங்கள் விஜய்யின் கைக்கு சென்றது குறிப்பிடத்தக்கது. அதே போல விஜய் நடிக்கவேண்டிய காதல் கோட்டை திரைப்படமும் அஜித்துக்கு சென்றது. இடையில் இருவரும் தனித்தனி பாதைகளில் சென்ற நிலையில், இப்போது சுதா கொங்கரா விஜய்க்காக சொன்ன கதையை அஜித் டிக் அடித்திருப்பது அந்த கதையின் மீது அவர் வைத்திருக்கும் நம்பிக்கையைக் காட்டுகிறது.இதில் மேலும் படிக்கவும் :