வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 29 செப்டம்பர் 2020 (10:25 IST)

கொரோனா தடுப்பூசி தயாரிப்பிற்காக கொல்லப்பட்ட சுறாக்கள் – இத்தனை லட்சமா?

உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி தயாரிப்பில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

உலகையை தலைகீழாக திருப்பிப் போட்டுள்ள கொரோனா வைரஸ் தடுப்பூசி கண்டுபிடிக்க எல்லா நாடுகளும் தங்கள் ஆராய்ச்சியாளர்களை முடுக்கி விட்டுள்ளனர். இதில் சில கண்டுபிடிப்புகள் சோதனைகளை தாண்டி மனித சோதனைக் கட்டத்தை எட்டியுள்ளன.

இந்நிலையில் சில கொரோனா தடுப்பூசிகளைப் பெற சுறாக்களின் கல்லீரலில் இருந்து இயற்கையாக சுரக்கும் ஒரு எண்ணெய் தேவைப்படுகிறதாம். இந்த எண்ணெய் சுறா ஸ்குவாலின் என அழைக்கப்படுகிறது. ஒரு டன் ஸ்குவாலின் தேவைக்கு 3000 சுறாக்கள் கொல்லப்பட வேண்டும். ஒரு டன் எண்ணெய்யைக் கொண்டு 10 லட்சம் தடுப்பூசிகளை தயாரிக்கலாம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இதுபோல ஸ்குவாலின் எடுப்பதற்காக 5 லட்சம் சுறாக்கள் கொல்லப்பட்டு இருக்கலாம் என சொல்லப்படுகிறது.

இந்த எண்ணெய்யை பல அழகு சாதனப் பொருட்களில் பயன்படுத்தப்படுவதால் இதற்காக ஆண்டுதோறும் சுமார் 30 லட்சம் சுறா மீன்கள் கொல்லப்படுவதாக சொல்லப்படுகிறது.