திங்கள், 17 நவம்பர் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: ஞாயிறு, 22 ஜூன் 2025 (15:07 IST)

13 கோடியா? 30 கோடியா? குத்துமதிப்பாக அடிச்சுவிட்ட ‘குபேரா’ படக்குழு..

13 கோடியா? 30 கோடியா? குத்துமதிப்பாக அடிச்சுவிட்ட ‘குபேரா’ படக்குழு..
நேற்று வெளியான தனுஷின் 'குபேரா' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இருப்பினும், படத்தில் நாகார்ஜுனாவின் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதால், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் படத்தின் வசூல் திருப்திகரமாக இருப்பதாகக் கூறப்பட்டது.
 
இந்த நிலையில், 'குபேரா' படத்தின் முதல் நாள் வசூல் இந்தியாவில் ₹13 கோடி என ஒரு தகவல் வெளியான வேளையில், படக்குழுவோ படம் உலகம் முழுவதும் ₹30 கோடி வசூலித்ததாகவும், ஆனால் இது தோராயமான கணக்கு என்றும் கூறியுள்ளது. 
 
இப்படி தோராயமாக வசூல் விவரத்தை வெளியிட்டால் எதை நம்புவது என ரசிகர்கள் மத்தியில் கேள்விகள் எழுந்துள்ளன. இந்தியா முழுவதும் ₹13 கோடி வசூல் செய்த ஒரு படம், உலகம் முழுவதும் எப்படி ₹30 கோடி வசூலிக்கும், இந்தியாவை விட வெளிநாடுகளில் அதிகமாக வசூல் செய்ததா என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
 
ரசிகர்களை குஷிப்படுத்த சினிமா டிராக்கர்கள்தான் போலியான வசூல் நிலவரத்தை கூறி வருகிறார்கள் என்றால், தற்போது தயாரிப்பு நிறுவனமே இது போன்ற தோராயமான தகவல்களை வெளியிடுவது ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Siva