1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. Case filed against actor Vijay devarakonda for this reason

விஜய் தேவரகொண்டா மேல் SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு!

லைகர்
தெலுங்கு சினிமாவின் இளம் சூப்பர் ஸ்டார் நடிகராக உருவாகி வருகிறார் விஜய் தேவரகொண்டா. அவர் நடித்த அர்ஜுன் ரெட்டி உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய வெற்றியை ஈட்ட, பேன் இந்தியா படமான லைகரில் நடிக்த்தார். ஆனால் அந்த படம் மிகப்பெரிய தோல்வியைத் தழுவியது. அதன் பின்னர் அவர் நடித்த குஷி திரைப்படம் தோல்விப் படமாக அமைந்தது.

கடந்த ஏப்ரல் மாதம் நடிகர் சூர்யாவின் ரெட்ரோ படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடந்தபோது அதில் சிறப்பு விருந்தினராக விஜய் தேவரகொண்டா கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் “பாகிஸ்தானியர்கள் குறைந்தபட்ச அறிவு கூட இல்லாமல் பழங்குடியினர் போல நடந்து கொள்கிறார்கள்’ என்று பேசினார்.

இதையடுத்து அவர் பழங்குடியினரை இழிவுபடுத்தும் விதமாகப் பேசியுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.  இது சம்மந்தமாக அவர் மேல் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது ஐதராபாத் போலீஸ் விஜய் தேவரகொண்டா மேல் ‘SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்’தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது. இதனால் அவர் கைது செய்யப்படுவாரா அல்லது விசாரணைக்கு அழைக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. 
அடுத்த கட்டுரையில்
தேர்தல் முடிவை பொறுத்து தான் அடுத்த படம்.. உண்மையை சொன்ன விஜய்..!