வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 3 டிசம்பர் 2022 (15:54 IST)

அஜித்தோடு நடிக்கும் வாய்ப்பு மிஸ் ஆனது எப்படி? விஜய் சேதுபதி பகிர்ந்த சீக்ரெட்!

நேற்று வெளியான DSP படத்தில் விஜய் சேதுபதி காவல்துறை அதிகாரியாக நடிக்க, அவருக்கு ஜோடியாக இந்த படத்தில் அனு கீர்த்திவாஸ் நடித்துள்ளார். கார்த்திக் சுப்பராஜ் தன்னுடைய ஸ்டோன்பென்ச் நிறுவனம் மூலம் தயாரிக்க, பொன்ராம் இயக்கத்தில் இந்த படம் ரிலீஸ் ஆகியுள்ளது.

தொடர்ந்து விஜய் சேதுபதி தோல்விப் படங்களாக நடித்ததால் இந்த படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இல்லை. படம் பார்த்த ரசிகர்களும் நெகட்டிவ் விமர்சனங்களாக பதிவு செய்து வருகின்றனர். ரிலீஸுக்குப் பின்னரும் பயங்கரமான அடி வாங்கியுள்ளது.

இந்நிலையில் தற்போது அளித்துள்ள நேர்காணலில் விஜய் சேதுபதி அஜித்துடன் நடிக்க முடியாமல் போன ஒரு வாய்ப்பு பற்றி பேசியுள்ளார். அதில் “முதன் முதலில் அஜித்துடன் நடிக்கதான் வாய்ப்பு வந்தது. ஆனால் அது அடுத்த கட்டத்துக்கு செல்லாமல் கைநழுவி போனது” எனக் கூறியுள்ளார்.