வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 2 டிசம்பர் 2022 (16:14 IST)

விஜய் சேதுபதியின் DSP படத்தில் கௌரவ வேடத்தில் பிரபல நடிகர்!

விஜய் சேதுபதி நடித்துள்ள DSP படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.

விஜய் சேதுபதி நடித்துள்ள DSP என்ற படத்தை இயக்குனர் பொன்ராம் இயக்கியுள்ளார். இந்த படத்தில் சேதுபதி மற்றும் செக்க சிவந்த வானம் ஆகிய திரைப்படங்களுக்குப் பின்னர் விஜய் சேதுபதி மீண்டும் காவல்துறை அதிகாரியாக இந்த படத்தில் நடித்து இருந்தார் என்பதும் அவருக்கு ஜோடியாக இந்த படத்தில் அனு கீர்த்திவாஸ் நடித்திருக்கிறார். கார்த்திக் சுப்பராஜ் தன்னுடைய ஸ்டோன்பென்ச் நிறுவனம் மூலம் தயாரித்துள்ள இந்த படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது.

தொடர்ந்து விஜய் சேதுபதி தோல்விப் படங்களாக நடித்ததால் இந்த படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இல்லை. படம் பார்த்த ரசிகர்களும் நெகட்டிவ் விமர்சனங்களாக பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் படத்தில் சர்ப்ரைஸ் எண்ட்ரியாக நடிகர் விமல் ஒரு சிறிய வேடத்தில் தோன்றியுள்ளார். இது சம்மந்தமான புகைப்படங்களை ரசிகர்கள் சமூகவலைதளத்தில் வெளியிட்டு வருகின்றனர்.