1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated: சனி, 3 டிசம்பர் 2022 (16:16 IST)

DSP பட வெற்றியை கொண்டாடிய படக்குழு!

vijay sethupathy
விஜய்சேதுபதியின் டிஎஸ்பி படத்தின் வெற்றியை படக்குழு கொண்டாடியுள்ளனர்.

விஜய் சேதுபதி நடித்துள்ள DSP என்ற படத்தை இயக்குனர் பொன்ராம் இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் சேதுபதி மற்றும் செக்க சிவந்த வானம் ஆகிய திரைப்படங்களுக்குப் பின்னர் விஜய் சேதுபதி மீண்டும் காவல்துறை அதிகாரியாக இந்த படத்தில் நடித்து இருந்தார் என்பதும் அவருக்கு ஜோடியாக இந்த படத்தில் அனு கீர்த்திவாஸ் நடித்திருக்கிறார். கார்த்திக் சுப்பராஜ் தன்னுடைய ஸ்டோன்பென்ச் நிறுவனம் மூலம் தயாரித்துள்ள இந்த படம்  நேற்று ரிலீஸ் ஆனது.

dsp

இப்படம் ரசிகர்களிடையே  நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், டிஎஸ்பி படக் குழுவினர் படத்தின் வெற்றியை கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளனர்.

இந்த வெற்றிக் கொண்டாட்டத்தில் விஜய்சேதுபதி, பொன்ராம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Edited by Sinoj