1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified வியாழன், 1 டிசம்பர் 2022 (13:17 IST)

முன்னாள் முதலமைச்சர் வாழ்க்கை வரலாறு படத்தில் விஜய் சேதுபதி?

vijay sethupathi
கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது
 
கர்நாடக மாநில முன்னாள் முதல் அமைச்சர் சித்தராமையா வாழ்க்கை வரலாறு திரைப்படம் உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன 
 
இந்த படத்தில் சித்தராமையா கேரக்டரில் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வர் சித்தராமையா எனது வாழ்க்கையை திரைப்படமாக்க தனது கட்சியினருக்கு விருப்பம் உள்ளதாகவும் ஆனால் தன்னால் நடிக்க முடியாது என்பதால் சிறந்த நடிகரை நடிக்க வைத்து அந்த படத்தை உருவாக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். 
 
ஏற்கனவே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, என்டி ராமராவ், ராஜசேகர ரெட்டி உள்பட பலருடைய வாழ்க்கை வரலாறு வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva