வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 25 பிப்ரவரி 2019 (16:12 IST)

சிவகார்த்திகேயன் விஜய்சேதுபதியை தொடர்ந்து பெண் வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகர்!

தமிழ் சினிமாவில் நடிகர்கள் ஒவ்வொரு படத்திற்கும் புது விதமான கெட்டப்பை மாற்றி படங்களில் நடித்து மக்களை கவர்ந்திழுப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர். அது வளர்ந்து வரும் நடிகர்களுக்கும் பெரியதாக உதவுகிறது. 


 
அந்தவகையில் தமிழ் சினிமாவில் ஆண் நடிகர்கள் பெண் வேடமிட்டு நடத்த படங்கள் பெருமளவு வெற்றி கண்டுள்ளது .அப்படித்தான் உலகநாயகன் கமல் நடிப்பில் 1996ம் ஆண்டில் வெளிவந்த  அவ்வை சண்முகி படம் ப்ளாக் பஸ்டர் வெற்றியை படைத்தது.  அதற்கு முக்கிய காரணம் வயதான பெண் தோற்றத்தில் கமல் நடித்தது தான்.
 
அதேபோன்று சிவகார்த்திகேயன் நடிப்பில் 2017-ல் வெளியான ரெமோ படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது விஜய்சேதுபதி நடித்துவரும் சூப்பர் டீலக்ஸ் படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
 
இந்நிலையில் சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதியை தொடர்ந்து தற்போது பரத் நடிப்பில் வெளியாக இருக்கும் பொட்டு படத்தின் போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டரில் ஹீரோ பரத் மிரட்டலான பெண் வேடத்தில் தோற்றமளிக்கிறார். இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.


 
இந்த படத்தில் பரத்துடன் இணைந்து நடிகைகள் நமீதா,இனியா,ஸ்ருஷ்டி டாங்கே உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வடிவுடையான் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் வரும் மார்ச் 8ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.