ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 16 பிப்ரவரி 2019 (21:19 IST)

ரஜினி பட வசனத்தை விளம்பரத்திற்கு பயன்படுத்திய ஆஸ்திரேலியா போலீஸ்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படங்கள் வெளியாகும்போது அவரது படத்தில் இடம்பெற்ற பஞ்ச் வசனங்கள் உள்பட பல வசனங்கள் அவரது ரசிகர்களிடையே பிரபலம் ஆவது வாடிக்கையான ஒன்றுதான். ஆனால் தற்போது அவரது பட வசனம் ஒன்றை குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் மீம் ஒன்றில் ஆஸ்திரேலிய போலீசார் பயன்படுத்தியுள்ளனர்.
 
ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் '2.0'. ஷங்கர் இயக்கிய பிரமாண்டமான இந்த படம் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆனது. இந்த நிலையில் இந்த படத்தில் விஞ்ஞானி கேரக்டரில் நடித்த ரஜினி This is beyond Science’ என்ற வசனம் ஒன்றை பேசியிருப்பார்.
 
இந்த நிலையில் சமீபத்தில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய நபரை பிடித்த ஆஸ்திரேலியா போலீசார் அவர் கோமா நிலைக்கு சென்றதை அறிந்து அவருக்கும் மற்றவர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த மீம்ஸ் ஒன்றை உருவாக்கி அதனை ஆஸ்திரேலிய காவல்துறையின் டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்தனர். அந்த டுவிட்டில் கோமா நிலைக்கு சென்ற நபரின் உடலில் 0.341% ஆல்கஹால் இருப்பதாக குறிப்பிட்டு ‘This is beyond Science’ என்ற ரஜினியின் வசனமும் குறிப்பிடப்பட்டுள்ளது
 
இந்த மீமை ஆஸ்திரேலியாவில் உள்ளவர்கள் கண்டுகொண்டதாக தெரியவில்லை. ஆனால் ரஜினி ரசிகர்கள் அதிகளவில் இந்த டுவீட்டை ஷேர் செய்து வருவதால் டுவிட்டர் டிரெண்டில் இடம்பெற்றுள்ளது.