வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : வியாழன், 21 பிப்ரவரி 2019 (15:22 IST)

அருள் நிதி படத்தின் இசையமைப்பாளர் மாற்றம்

#K13 என்று அழைக்கப்படும் பெயரிடப்படாத படத்தில் அருள்நிதி, ஷரத்தா  ஶ்ரீநாத், நடித்து வருகின்றனர். இந்த படத்துக்கு டர்புக்கா சிவா இசையமைப்பதாக இருந்தது. இந்நிலையில் இவருக்கு பதில்  விக்ரம் வேதா புகழ் சாம் சிஎஸ் இசையமைக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
 
உளவியல் திரைக்கதையாக உருவாகும் இப்படத்தை பரத் நீலகண்டன் இயக்கி வருகிறார். இது தொடர்பாக இயக்குனர் பரத் மணிகண்டன் கூறுகையில்,  குறிப்பிட்ட காலகட்டத்தில் படத்தை முடிக்க வேண்டிய கட்டாயத்தில் நாங்கள் இருந்தோம். ஆனால் சிவாவின் கால அட்டவணையில் முடித்த கொடுக்க முடியாத நிலை இருந்தது. இதனால் எதிர்காலத்தில் வேறு படத்தில் இணையலாம் என முடிவு செய்துவிட்டோம் என்றார்.