ஆடையில்லா அமலா பாலின் வீடியோவை எப்படி வெறித்தனமா பார்த்திருக்கிறார்கள் பாருங்க!

Last Updated: செவ்வாய், 25 ஜூன் 2019 (13:00 IST)
மேயாத மான் பட இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் அமலாபால் நடித்திருக்கும் படம் ஆடை. இந்தப் படத்தை வீ ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. விஜய் கார்த்திக் கண்ணா ஒளிப்பதிவில், பிரதீப் குமார் இசையமைத்துள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது. 


 
அதனை தொடர்ந்து இப்படத்தின் டீசர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளிவந்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி பேசப்பட்டு படத்தின் மீதான எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது. ஆடையின்றி வெறும் டாய்லெட் பேப்பர்களை உடலில் ஊற்றிக்கொண்டு அமலா பால் மிகவும் போல்டக நடித்துள்ள இந்த படத்தின் டீசர் மற்றும் மீம்ஸ் போன்றவை  சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வந்தது. 
 
ஆடை இல்லாமல் அமலா பால் நடித்திருக்கும் இந்த காட்சியை சிறுசேரியில் உள்ள ஒரு பேக்ட்ரியில் படமாக்கியுள்ளனர். மேலும் அமலா பால் இக்காட்சியில் நடிக்கும்போது முழு நிர்வாணமாக நடிக்கவில்லையாம், மாறாக ஸ்கின் க்ளாத் அணிந்துகொண்டு பாதுகாப்பாக நடித்துள்ளாராம். மேலும் இக்காட்சியை படமாக்கும்போது அந்த இடத்தில் தேவையான நபர்கள் மட்டுமே இருந்தததாகவும் கூறப்படுகிறது. 
 
கடந்த ஜூன் 18ம் தேதி வெளிவந்த இந்த ஆடை டீசரை இதுவரை 7.2 மில்லியன் பேருக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 


இதில் மேலும் படிக்கவும் :