ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 20 ஜூன் 2019 (12:41 IST)

20 நாட்கள் உடலில் ஒட்டு துணியில்லாமல் நடித்தாரா அமலாபால்?

நடிகை அமலாபால் ஆடை படத்திற்காக கிட்டதட்ட 20 நாட்கள் ஆடையின்றி நடித்ததாக செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. 
 
நடிகை அமலா பால் நடிப்பில் உருவாகியுள்ள ஆடை படத்தின் டீசர் நேற்று முன் தினம் வெளியானது. இந்த டீசரை கண்ட பலரும் அமலாபாலின் வித்தியாசமான நடிப்பி பாராட்டினர். அதேபோல் திறையுலகை சேர்ந்த பலர் அமலாபாலின் துணிச்சலான நடிப்பை பாராட்டினர். 
 
தணிக்கை குழுவால் ‘ஏ' சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் அமலாபால் ஆடையின்றி நடித்திருக்கு காட்சிகள் நிறைய இருக்கும் என தெரிகிறது. அதோடு, இந்த படத்திற்காக அமலாபால் கிட்டதட்ட 20 நாட்கள் ஆடையின்றி நடித்ததாக செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. 
ஆனால், இந்த செய்தியில் எந்த அளவு உண்மை உள்ளது என்பதை அமாலாபாலோ அல்லது படக்குழுவோ தெரிவித்தால்தான் தெரியும். ஆனால், அமலாபால் ஸ்கின் கலர் உடை அணிந்து இந்த படத்தில் நடித்தார் எனவும் கூறப்படுகிறது. 
 
இந்த படத்தை மேயாத மான் படத்தை இயக்கிய ரத்ன குமார் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.