சகபடைப்பாளிகளின் துணிச்சலை சீண்டுகிறது - ஆடை டீசரை அவர் ஸ்டைலில் பாராட்டிய பார்த்திபன் !

Last Modified வியாழன், 20 ஜூன் 2019 (11:58 IST)
சமீபத்தில் வெளியான ஆடைப் படத்தின் டீசர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

நடிகை அமலா பால் நடிப்பில் உருவாகியுள்ள ஆடை படத்தின் டீசர் நேற்று முன் தினம் வெளியானது. இந்த டீசரை கண்ட பலரும் அமலாபாலின் வித்தியாசமான நடிப்பி பாராட்டினர். அதேபோல் திறையுலகை சேர்ந்த பலர் அமலாபாலின் துணிச்சலான நடிப்பை பாராட்டினர். தணிக்கை குழுவால் ‘ஏ' சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் சில காட்சிகள் அமலா பால் நிர்வானமாக நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து சமூக வலைதளங்களில் இதுவரை இந்த டீசரை 37 லட்சம் பேர் பார்த்துள்ளனர். இந்த டீசரைப் பார்த்து விட்டு இயக்குனர் பார்த்திபன் தனது ஸ்டைலில் பாராட்டியுள்ளார். அவரது டிவிட்டில் ‘வெளிப்படையாக சொல்லவேண்டுமானால்… ஆடை டீசர் சக இயக்குனர்களின் துணிச்சலை சீண்டுகிறது… ஆடையோடு – அமலா பால் அழகானவர், ஆனால், ஆடை (படத்தில் ) – அழகு மற்றும் தைரியமானவர்’ எனக் கூறியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :