ஒவ்வொரு அடிக்கும் ஒரு பஞ்ச் இருக்கு: 'விஸ்வாசம்' படம் குறித்த புதிய தகவல்

Last Modified வியாழன், 3 ஜனவரி 2019 (21:13 IST)
தல அஜித் நடித்த 'விஸ்வாசம்' திரைப்படம் வரும் 10ஆம் தேதி வெளியாவது 100% உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் எடிட்டர் ரூபன் சமீபத்தில் இந்த படத்தை எடிட் செய்த அனுபவம் குறித்து கூறியுள்ளார்.

இந்த படத்தின் ஒரு சண்டைக்காட்சியில் வில்லன்கள் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு அடி அடிக்கும்போது ஒரு பஞ்ச் டயலாக்கை அஜித் பேசுவார் என்றும், அந்த சண்டைக்காட்சி அஜித் ரசிகர்களுக்கு செம விருந்தாக இருக்கும் என்றும் கூறினார்.

அதேபோல் எனக்கு தெரிந்து இரண்டு படங்கள் அதிக போட்டியுடன் வெளியாவது இப்போதுதான் என்றும் பேட்ட, விஸ்வாசம் என இரண்டு படங்களுக்கும் சம அளவில் எதிர்பார்ப்பு இருப்பதாகவே தான் கருதுவதாகவும் கூறினார்.


மேலும் 'வீரம்' படம் போலவே இந்த படத்திலும் கிராமத்து பின்னணி, பெரிய குடும்பம், செண்டிமெண்ட், குடும்பத்தை காப்பாற்றும் ஹீரோ என்று இருந்தாலும் இந்த படம் முற்றிலும் புதிய விருந்தாக அஜித் ரசிகர்களுக்கு இருக்கும் என்றும் கூறினார்.


இதில் மேலும் படிக்கவும் :