வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 3 ஜனவரி 2019 (12:39 IST)

2019ம் ஆண்டில் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள படங்களின் லிஸ்ட் இதோ...!

புதுவருடம் தொடங்கிய கையேடு தமிழ் சினிமாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களின் லிஸ்டும்  அடுக்கிக்கொண்டே போகும் அளவிற்கு நீண்டுவிட்டது. 


 
தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை, கடந்த வருடத்தின் இரண்டாம் பாதியில்தான் நல்ல நல்ல படங்கள் ரிலீஸாகின. ஆனால் இந்த வரும் ஆரம்பத்திலேயே அமர்க்களம் படுத்தும் விதத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘பேட்ட’ படமும், தல அஜித்தின் ‘விஸ்வாசம்’ படமும் பிள்ளையார் சுழி போட்டுத் தொடங்கிவைக்கப் போகிறது. 
 
அந்தவகையில் 2019 ம் ஆண்டில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படங்கள் லிஸ்ட் இதோ..! 
 
 
ஜனவரி 11ம் தேதி ரஜினியின் "பேட்ட" 


 
ரஜினியின் தீவிர ரசிகன் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘பேட்ட’ வருகிற 10-தேதி திரைக்கு வரவுள்ளது. இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரனும் வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
 
ஜனவரி 14ம் தேதி அஜித்தின் ‘விஸ்வாசம்’


 
சிறுத்தை சிவா இயக்கத்தில் நான்காவது முறையாக  அஜித்தின் ‘விஸ்வாசம்’ உருவாகியுள்ளது சமீபத்தில் வெளிவந்த இதன் ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். டி.இமான் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படம் வருகிற 14-ம் தேதி ரிலீஸாக இருக்கிறது.
 
சூர்யாவின் ‘என்.ஜி.கே’


 
செல்வராகவன் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் உருவாகிவரும் படம் ‘என்.ஜி.கே.’யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தில் ராகுல் ப்ரீத் சிங் மற்றும் சாய் பல்லவி என இரண்டு நடிகைகள் நடிக்கிறார்கள். இந்த வருடத்தில் ரிலீஸ் ஆகவுள்ள  இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு இன்னும் அறிவிக்கவில்லை.
 
கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’


 
1996-ம் ஆண்டு வெளிவந்து இன்று வரை மக்கள் மனதில் நீங்கா இடப்பிடித்துவரும் ‘இந்தியன்’ படத்தின் தொடர்ச்சியாக உருவாக இருக்கிறது ‘இந்தியன் 2’. பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கும் இப்படத்தில்  கமல்ஹாசக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார்.அனிருத் இசையமைக்கும் இப்படம் வருகிற 18-ம் தேதி பொள்ளாச்சியில் படப்பிடிப்பு தொடங்குகிறது.
 
சிம்புவின் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’


 
பவன் கல்யாண் நடிப்பில் வெளியான ‘அத்தரண்டிகி தாரேதி’ தெலுங்குப் படத்தின் ரீமேக்காக சுந்தர்.சி இயக்க சிம்பு நடித்துவரும் படம் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’.இப்படத்தில் சிம்புவுக்கு  ஜோடியாக மேகா ஆகாஷ், கேத்ரின் தெரேசா என இரண்டு ஹீரோயின்கள் நடித்துள்ளனர். ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்கும் இந்தப் படம், வருகிற பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், படப்பிடிப்பு முடியாத காரணத்தால் புதிய ரிலீஸ் தேதிக்காகக் காத்திருக்கின்றனர் சிம்பு ரசிகர்கள்.
 
 
விஜய் சேதுபதியின் ‘சூப்பர் டீலக்ஸ்’


 
தியாகராஜன் குமாரராஜா  இயக்கியுள்ள சூப்பர் டீலக்ஸ் படத்தில் விஜய் சேதுபதி ஷில்பா என்ற திருநங்கை தோற்றத்திலும் நடித்துள்ளார். சமந்தா ஹீரோயினாக நடிக்கும்  இந்தப் படத்திற்கு , யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். சென்ற வருடமே ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படம், இந்த வருடத்தின் ரிலீஸ் பட்டியலில் இணைந்துள்ளது.
 
அஜித்தின் பிங்க்


 
எச் வினோத் இயக்கும் பிங்க் ரீமேக் படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். இந்தப் படத்தில் அமிதாப்பச்சனின் கதாபாத்திரத்தில் அஜித் நடிக்க உள்ளார்.  அஜித்துடன் நஸ்ரியா நஸீம் உள்ளிட்டோர் நடிக்கவுள்ளனர். கடந்த வருட இறுதியில் படப்பிடிப்பு தொடங்கியதால், ‘விஸ்வாசம்’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படமும் இந்த வருடமே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
விஜய்யின் ‘தளபதி 63’


 
அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய் தளபதி 63 படத்தில் நடிக்கவுள்ளார் இப்படத்தில் விஜய் கால்பந்தாட்டத்தின் கோச் ஆக நடிக்கவுள்ளதாக ஒன் லைன் ஸ்டோரி சமூகவலைத்தளத்தில் வலம் வந்துகொண்டிருக்கிறது . ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படமும் ‘மெர்சல்’, ‘சர்கார்’ படங்களின் வரிசையில்  2019 ஆண்டின் தீபாவளியன்று  ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
கார்த்தியின் ‘தேவ்’


 
‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தைத் தொடர்ந்து, ரஜத் ரவிசங்கர் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘தேவ்’.  இந்தப் படத்தில் கார்த்தி ஜோடியாகரகுல் ப்ரீத்சிங்  நடிக்கிறார். 
ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இந்தப் படம் தமிழ்ப் புத்தாண்டில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.