என் பையன் நல்லா நடிக்கிறானா? விஜய்யிடம் விசாரித்த விஜய் சேதுபதியின் தாய்!

Last Modified வியாழன், 7 ஜனவரி 2021 (16:27 IST)

நடிகர் விஜய் சேதுபதியின் தாயார் தனது மகன் நன்றாக நடிக்கிறானா என விஜய்யிடம் விசாரித்துள்ளாராம்.

தமிழ் சினிமாவில் இப்போது நடிக்கும் நடிகர்களில் பன்முகத்திறமைக் கொண்டவர் என்றால் அது விஜய் சேதுபதிதான். ஹீரோவாக நடிக்கும் அதே நேரத்தில் வில்லனாகவும் நடிக்கும் துணிச்சல் உள்ளவர். அவர் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த ஒரு நேர்காணலில் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பின் போது நடந்த ஒரு சுவாரஸ்யமான தகவலை வெளியிட்டுள்ளார். மாஸ்டர் படப்பிடிப்பின் போது விஜய்யை பார்க்க வந்த தனது தாய் சரஸ்வதி
விஜய்யிடம் ‘எனது பையன் நன்றாக நடிக்கிறானா?’ என விசாரித்தார் எனக் கூறியுள்ளார். மாஸ்டர் படப்பிடிப்பின் போது விஜய் சேதுபதி விஜய்க்கு முத்தம் கொடுப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகி இணையத்தைக் கலக்கின என்பது குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :