தனுஷின் ஹாலிவுட் பட ஷூட் எப்போது – வெளியான தகவல்!
தனுஷ் நடிப்பில் நெட்பிளிக்ஸ் உருவாக்கும் ஹாலிவுட் படத்தின் ஷூட்டிங் ஜனவரி 10 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
The Gray Man எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில், ரையான் கோஸ்லிங், க்ரிஸ் இவான்ஸ், ஜெஸ்ஸிகா ஹென்விக் மற்றும் அர்மா டி அனாஸ் உள்ளிட்ட ஹாலிவுட் நட்சத்திரங்கள் நடிக்கும் இந்தப் படத்தில், தனுஷும் நடிக்க உள்ளார். நெட்பிளிக்ஸின் மிகப் பிரம்மாண்டமான தயாரிப்பாக உருவாகும் இந்த படத்தின் அறிவிப்பை காலையில் நெட்பிளிக்ஸ் வெளியிட்டது. அதையடுத்து தனுஷுக்கு பல தரப்பிலும் இருந்து வாழ்த்து மழை பொழிந்தது. இதற்கு முன்னர் தனுஷ் 2018ல் வெளிவந்த The Extraordinary Journey of the Fakir படத்தின் மூலம் ஹாலிவுட்டிற்கு அறிமுகமானவர். The Gray Man அவரது இரண்டாவது ஹாலிவுட் திரைப்படமாக இருக்கும்.
இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 10 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் 10 நாட்கள் வீதம் அந்த படத்துக்கு தேதிகள் ஒதுக்கியுள்ளாராம் தனுஷ். அந்த படத்தில் நடித்துக் கொண்டே தமிழில் தான் ஒப்புக்கொண்டுள்ள கார்த்திக் நரேன் படத்திலும் நடிக்க உள்ளாராம்.