திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 7 ஜனவரி 2021 (16:08 IST)

நோ அரசியல்…. நோ பேண்டசி… நம்ம ரூட் இதுதான் – செல்வராகவனின் அடுத்த படக் களம் இதுதான்!

செல்வராகவன் தனுஷை வைத்து இயக்கும் புதிய படம் பீல்குட் படமாக அமையும் என சொல்லப்படுகிறது.

நடிகர் தனுஷும் செல்வராகவனும் தமிழ் சினிமாவின் வெற்றிக் கூட்டணிகளில் முக்கியமானவர்கள் . இவர்கள் கூட்டணியில் உருவான துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை மற்றும்  மயக்கம் என்ன ஆகிய படங்கள் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன. 8 ஆண்டுகளுக்குப் பிறகு தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க உள்ளார் தனுஷ். இந்த 8 ஆண்டுகாலத்தில் செல்வராகவன் இயக்கிய எந்த படமும் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் செல்வராகவன் மற்றும் தனுஷ் இணையும் படத்தின் கதைக் களம் காதல் அம்சம் கொண்ட பீல் குட் படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. செல்வராகவனின் வெற்றி படங்களான 7 ஜி ரெயின்போ காலனி, காதல் கொண்டேன், யாரடி நீ மோகினி ஆகிய படங்கள் எல்லாம் காதல் அம்சம் கொண்ட படங்கள்தான். இடையில் அவர் இயக்கிய பேண்டசி மற்றும் அரசியல் கதைகள் எல்லாம் அட்டர் பிளாப் ஆக, தனது ஏரியாவுக்குள் மீண்டும் புகுந்துள்ளார் செல்வராகவன்.