சந்திரமுகி -2 படத்தில் ரஜினி நடிக்காதது ஏன்? வெளியான தகவல்
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நடித்து வரும் படம் ஜெயிலர். இப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி வருகிறார்.
இந்த நிலையில், ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் ஆன படம் சந்திரமுகி. இதில், நயன் தாரா, ஜோதிக, பிரபு, வடிவேலு உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்தனர். பி.வாசு இயக்கி யிருந்தார்.
இப்படம் வெளியாகி 18 ஆண்டுகளுக்குப் பின், இப்படத்தின் 2 ஆம் பாகம் தயாராகி வருகிறது. சமீபத்தில், சந்திரமுகி 2 பட அறிவிப்பு வெளியானதும் இப்படத்தின் ஹீரோ ராகவா லாரன்ஸ் நடிகர் ரஜினியை சந்தித்து ஆசி பெற்றார்.இப்படத்தையும் பி.வாசு இயக்குகிறார். இவருக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்கிறார்.
இந்த நிலையில், சந்திரமுகி-2 படத்தின் ரஜினி ஏன் நடிக்கவில்லை என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.
இதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது. அதில், கன்னடத்தின் வெளியான சந்திரமுகி1( ஆப்தமித்ரா) வெற்றியைத் தொடர்ந்து, சில நாட்களில் இப்படத்தில் நடித்த சௌந்தர்யா காலமானார்.
(ஆப்தமித்ரா-2 )படத்தில் நடித்த நடிகர் விஸ்ணுவர்தனும் சில நாட்களில் காலமானார். இந்த சென்டிமென்டை அடிப்படையாகக் கொண்டு நடிகர் ரஜினி காந்த் சந்திரமுகி 2 படத்தில் நடிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.