1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 29 ஜூலை 2022 (16:46 IST)

ரஜினியின் ''ஜெயிலர்'' படத்தில் இணைந்த பிரபல நடிகர்!

தமிழ் சினிமாவில் சூப்பர்  ஸ்டார் ரஜினி.  ‘அண்ணாத்த’ படத்திற்குப் பின் இவர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ஜெயிலர்’படத்தில் நடிக்கவுள்ளார்.

தற்போது, ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் ஜெயிலர் படத்தின் செட்டிங்க் அமைக்கும் பணி  நடந்து வருகிறது.

இந்த  நிலையில் வரும் ஆகஸ்டில் இப்படத்தின் பூஜை போடப்பட்டு, செப்டம்பரில் இப்படத்தின் ஷூட்டிங்க்  நடத்தப்படுவதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், ஜெயிலர் படத்தில் முக்கிய வேடத்தில் வசந்த் ரவி நடிக்கவுள்ளார்.

ஏற்கனவே, இப்படத்தில் ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், வசந்த் ரவியின் வருகை ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.