சுவையான ரவா லட்டு செய்வது எப்படி...?
தேவையான பொருட்கள்:
ரவை - அரை கிலோ
சர்க்கரை - கால் கிலோ
முந்திரி - தேவையான அளவு
திராட்சை - தேவையான அளவு
நெய் - சிறிதளவு
ஏலக்காய் தூள் - அரை ஸ்பூன்
சூடான பால் - தேவையான அளவு
செய்முறை:
வாணலியில் சிறிதளவு நெய் சேர்த்து நெய் சூடானதும் அதில் முந்திரி, திராட்சை சேர்த்து வறுத்து எடுத்து கொள்ளவும். அதே நெய்யில் ரவையை சேர்த்து வறுத்து எடுத்து கொள்ளவும்.
கால் கப் சர்க்கரையை மிக்சி ஜாரில் சேர்த்து பொடித்து எடுத்துக் கொள்ளவும். ஒரு அகலமான பாத்திரத்தில் வறுத்து வைத்துள்ள ரவையை சேர்த்துக் கொள்ளவும். பின்னர் பொடி செய்து வைத்துள்ள சர்க்கரையை சேர்த்து கொள்ளவும்.
வறுத்த முந்திரி, திராட்சை, ஏலக்காய் தூள், சிறிதளவு நெய் தேவைப்பட்டால் சிறிதளவு மிதமான சூட்டில் இருக்கும் பால் சேர்த்து உருண்டைகளாக பிடித்து சிறிது நேரம் உலர வைத்து சாப்பிட்டால் சுவையான ரவா லட்டு தயார்.