புதன், 13 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 15 மார்ச் 2022 (11:17 IST)

நாளுக்கு நாள் அதிகரிக்கும் சமையல் எண்ணெய் விலை! – அதிர்ச்சியில் மக்கள்!

உக்ரைனில் போர் நடந்து வரும் நிலையில் இந்தியாவில் சமையல் எண்ணெய் விலை வேகமாக அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் சூரியகாந்தி எண்ணெய் அதிகளவில் சமையலுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவின் சூரியகாந்தி எண்ணெய் தேவையில் 80 சதவீதம் உக்ரைனில் இருந்தே கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் உக்ரைனில் போர் தொடங்கியுள்ளதால் சூரியகாந்தி எண்ணெய் விலை ரூ.50 வரை விலை உயர்ந்துள்ளது. மற்ற எண்ணெய் விலைகளும் தொடர்ந்து உயர்ந்து வருகின்றன.

முன்னதாக ஒரு லிட்டர் நல்லெண்ணெய் ரூ.230லிருந்து ரூ.280ஆக விற்கப்படுகிறது. கடலெண்ணெய் ரூ.150லிருந்து உயர்ந்து ரூ.170 ஆக விற்பனையாகி வருகிறது. பாமாயில் ரூ.125லிருந்து உயர்ந்து ரூ.175க்கு விற்பனையாகி வருகிறது. சமையல் எண்ணெய் விலை அதிகரித்துள்ளது இல்லத்தரசிகளுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.