1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By Sasikala
Last Updated : வெள்ளி, 11 மார்ச் 2022 (17:20 IST)

சுவையான கறிவேப்பிலை குழம்பு செய்ய !!

தேவையான பொருட்கள்:

கறிவேப்பிலை -1 கப்
சின்ன வெங்காயம் - 12
தக்காளி - 2
புளி - சிறிய எலுமிச்சை அளவு
உப்பு - தேவையானஅளவு
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
கொத்தமல்லி தூள் - 2 டீஸ்பூன்
நல்லெண்ணெய் - 3 டீஸ்பூன்
கடுகு - 1 தேக்கரண்டி



செய்முறை:

சின்ன வெங்காயத்தை தோலுரித்து 2 துண்டுகளாக வெட்டி வைத்துக்கொள்ளவும். தக்காளியை விழுதாக அரைக்கவும். கறிவேப்பிலையைக் கழுவி, மிகக் குறைந்த அளவு தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும். புளியை வெந்நீரில் 15 நிமிடம் ஊறவைத்து சாறு எடுத்துக்கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணெய்யைச் சூடாக்கி, கடுகு சேர்த்து, அது வதங்கியதும், வெங்காயம் சேர்த்து வதக்கவும். கறிவேப்பிலை விழுதைச் சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். தக்காளி விழுது, மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லி தூள் மற்றும் தேவையான உப்பு சேர்க்கவும்.

தக்காளியின் பச்சை வாசனை போகும் வரை மிதமான தீயில் வதக்கவும். பின்னர் புளி தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும், குழம்பு கெட்டியானதும் எண்ணெய் பிரிந்து வரை வேகவைத்து இறக்கவும். இவை சாதம் அல்லது தோசையுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.