1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By Sasikala
Last Updated : திங்கள், 14 மார்ச் 2022 (17:08 IST)

சுவையான முறையில் வெஜ் பிரியாணி செய்ய வேண்டுமா...?

தேவையான பொருட்கள்:

பாசுமதி அரிசி - 1 கிலோ
கேரட், பீன்ஸ் - 1/2 கிலோ
உருளை, பட்டாணி - 1/2 கிலோ
மீல் மேக்கர் - 100 கிராம்
பிரெட்துண்டுகள் - 4
வெங்காயம் - 4
தக்காளி - 4
பச்சைமிளகாய் - 6
தயிர் - 2 டேபிள்ஸ்பூன்
மிளகாய்தூள் - 1 ஸ்பூன்
பிரியாணி மசாலா - 1 ஸ்பூன்
கரம்மசாலா தூள் - 1 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 2 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை - 1
புதினா, கொத்தமல்லி - தலா 1 கைப்பிடி
உப்பு - தேவையான அளவு

தாளிக்க தேவையான பொருட்கள்:

எண்ணெய் - தேவையான அளவு
பட்டை, லவங்கம், ஏலக்காய் - தலா 2
பிரிஞ்சு இலை, அன்னாசிபூ - தலா 2



செய்முறை:

அரிசியை ஊற வைக்கவும். பிரட்டை சிறு துண்டுகளாக கட் செய்து நெய் அல்லது எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும். பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிப்பு பொருட்கள் சேர்த்து வெங்காயம், பச்சைமிளகாய் வதக்கி, புதினா கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்.

பின்னர் தக்காளி சேர்த்து வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி காய்கறிகள் சேர்க்கவும். இஞ்சி பூண்டு விழுது அத்துடன் தயிர் சேர்க்கவும். மீல் மேக்கர் மற்றும் தூள் வகைகள் சேர்த்து வதக்கவும்.

ஒரு கப் அரிசிக்கு 1 + அரை கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். நன்கு கொதித்ததும் அரிசியை சேர்க்கவும். கலந்து 5 நிமிடம் முழு தீயில் மூடி வேக விடவும். 5 நிமிடம் கழித்து பொரித்த பிரட்துண்டுகள், புதினா சிறிது, எலுமிச்சை பிழிந்து, கலர் (விரும்பினால்) சேர்க்கவும்.

மூடி மேலே கனமான பாத்திரத்தை வைத்து 10 நிமிடம் சிம்மில் வேகவைத்து இறக்கவும். தம்மில் வைத்தல் 30 நிமிடம் கழித்து திறந்தால் சுவையானவெஜ் பிரியாணி தயார். ஆனியன் ரெய்தாவுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.