திங்கள், 27 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. அசைவம்
Written By Sasikala

வெஜிடேபிள் முட்டை ரோல் செய்வது எப்படி...?

தேவையான பொருட்கள்:
 
சப்பாத்தி - 1
உருளைக்கிழங்கு - 1 (நறுக்கியது)
கத்திரிக்காய் - 1 (நறுக்கியது)
முட்டை 2 - (மிக்சியில் நன்றாக அடித்துக் கொள்ளவும்)
வெங்காயம் 1 - (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் 1 - (பொடியாக நறுக்கியது)
மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
முட்டை கோஸ் - 4 டேபிள் ஸ்பூன் (துருவியது)
தக்காளி - தேவையான அளவு
சில்லி சாஸ் - தேவையான அளவு
எண்ணெய் 2 - டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
 
வெஜிடேபிள் முட்டை ரோல் செய்வதற்கு முதலில் கடாயில் கொஞ்சம் எண்ணெய் விட்டு எண்ணெய் காய்ந்ததும் அவற்றில் நறுக்கிய உருளைக்கிழங்கை போட்டு நன்றாக வதக்கவும். அதன் பின்பு அவற்றில் நறுக்கிய கத்திரிக்காயை போட்டு நன்றாக வதக்கவும்.பிரகு பச்சை மிளகாய் மற்றும் வெங்காயம் சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.
 
அதன் பிறகு மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் முட்டைகோஸ் ஆகியவற்றையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். இவை அனைத்தும் நன்றாக வதங்கிய பிறகு அடித்து வைத்திருக்கும் முட்டையை இவற்றில் சேர்த்து நன்றாக கலக்கி இறக்க வேண்டும்.
 
பின்பு சப்பாத்தியின் மேல் இந்த கலவையை வைத்து அதன் மேல் தக்காளி மற்றும் சில்லி சாஸை ஊற்றி ரோல் செய்தால் சுவையான  வெஜிடேபிள் முட்டை ரோல் தயார்.