இந்த ஒரு காரணத்திற்கு தான் 58 வயசாகியும் கல்யாணம் பண்ணல - கோவை சரளா!

Papiksha Joseph| Last Updated: வியாழன், 3 செப்டம்பர் 2020 (14:30 IST)

நடிகை கோவை சரளா, தமிழ்சினிமாவில் காமெடி நடிகைகள் இல்லாத பற்றாக்குறையை போக்கியவர். இவர் தமிழ், தெலுங்கு உள்பட பல மொழிகளில் 750க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார்.

கொங்கு தமிழில் கோவை சரளா செய்யும் காமெடிகள் பலரையும் ரசிக்க வைத்தது. 30 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வந்த கோவை சரளா நடிகர் வடிவேலுவுக்கு ஜோடியாக நடித்து காமெடியில் கலக்கி பெரும் பிரபலமடைந்தவர். இந்நிலையில் தற்ப்போது 58 வயதாகும் கோவை சரளா திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்து வருவது குறித்து கூறியுள்ளார்.

தனக்கு 4 சகோதரிகள் ஒரு சகோதரர் இருக்கிறார். அவர்கள் அனைவருக்கும் நானே திருமணம் செய்து வைத்ததால் காலம் ஓடிவிட்டது. பின்னர் அவரவருக்கு குழந்தை பிறந்தது. அவர்களையும் நானே படிக்க வைக்கிறேன். திருணம் செய்துகொள்ளும் எண்ணம் தோன்றவேயில்லை. இன்னும் நிறைய அனாதை குழந்தைகளுக்கு உதவி செய்கிறேன். வாழ்நாள் முழுவதும் இப்படியே இருந்துவிட வேண்டும் என தோன்றிவிட்டது. இப்படி இருப்பது எனக்கு பிடித்துவிட்டது என கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :