நான் ஒரு இளவரசி.... அடடே ஓரளவுக்கு ஓகே ஆகிட்டாயா ஜூலி!

Papiksha Joseph| Last Updated: வியாழன், 3 செப்டம்பர் 2020 (14:22 IST)

ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் அறிமுகமாகி, பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களின் ஆதரவு மற்றும் வெறுப்பையும் சம்பாதித்தார். முதல் சீசன் முடிந்து இரண்டாவது சீசனும் முடிந்துவிட்டது. ஆனால் இன்னும் ஜூலியை கிண்டல் செய்வதை நிறுத்தவில்லை நெட்டிசன்கள்.

பல நெகடிவ் இமேஜ்களை பெற்றாலும் அதன் பிறகு விளம்பரம், ரியாலிட்டி ஷோ, பட வாய்ப்பு என படு பிஸியாக ஆகிவிட்டார். அதே போல இவர் என்ன செய்தாலும் கலாய்ப்பதற்கென்று ஒரு கூட்டமும் இருந்துகொண்டு தான் வருகிறது. ஆனாலும் அதையெல்லாம் உடைத்தெறிந்து தனது வழியில் முன்னேறி கொண்டே செல்கிறார்.

அந்தவகையில் கடந்த சில தினங்களாக மாடர்ன் போட்டோ ஷூட் நடத்தி இணையவாசிகளை வாய்பிளக்க செய்த ஜூலி தற்ப்போது மணப்பெண் போன்று அழகிய கௌன் அணிந்து போட்டோ ஷூட் நடத்திய புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டு " நான் ஒரு இளவரசி. எல்லா பெண்களும்... அவர்கள் பழைய குடிசையில் வாழ்ந்தாலும் கூட... அவர்கள் கிழிந்த பழைய ஆடை அணிந்தாலும், அவர்கள் அழகாகவோ, புத்திசாலித்தனமாகவோ, இளமையாகவோ இல்லாவிட்டாலும் கூட. அவர்கள் இன்னும் ஒரு இளவரசி தான் என்று அழகான கேப்ஷன் கொடுத்து பதிவிட்டுள்ளார்.
I am a princess. All girls are. Even if they live in tiny old attics. Even if they dress in rags, even if they aren't pretty, or smart, or young. They're still a princessஇதில் மேலும் படிக்கவும் :