1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By siva
Last Modified: புதன், 24 மார்ச் 2021 (15:41 IST)

மருத்துவ பணியில் முதல் நாள்: சூப்பர் சிங்கர் ப்ரியங்காவின் இன்ஸ்டாகிராம் பதிவு!

மருத்துவ பணியில் முதல் நாள்: சூப்பர் சிங்கர் ப்ரியங்காவின் இன்ஸ்டாகிராம் பதிவு!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் டைட்டில் பட்டம் வென்றவர் பிரியங்கா என்பது தெரிந்ததே. இவர் ஒரு சில திரைப்படங்களிலும் பாடியுள்ளார் என்பதும் யூடியூபில் இவர் பாடிய பாடல்கள் பிரபலம் என்பது தெரிந்ததே
 
சூப்பர் சிங்கர் டைட்டில் பட்டம் பெற்றாலும் அடிப்படையில் இவர் ஒரு மருத்துவர் என்பதும் பல் மருத்துவ படிப்பு படித்துக்கொண்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது படிப்பை முடித்து விட்டு தனது முதல் நாள் மருத்துவ பணியை தொடங்கி உள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பதிவில் புகைப்படத்துடன் பதிவு செய்துள்ளார் 
 
எதிர்காலத்தில் மருத்துவமனை கட்டுவது தனது கனவு என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். பல் மருத்துவராக ஏழை எளியவர்களுக்கு சேவை செய்ய இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளதை அடுத்து அவருக்கு நெட்டிசன்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்