தொடர்புடைய செய்திகள்
- புயலின்போது டைட்டிலை அறிவிக்கும் ‘புரட்சிப்புயல்’ நடிகர்!
- விஷால் திருமணம் நின்றதற்கு அந்த நடிகைதான் காரணம் – பத்திரிக்கையாளர் அதிர்ச்சி தகவல்!
- திரையரங்குகளில் படம் வெளியீடு... பேச்சுவார்த்தையில் உடன்பாடு
- சூரியின் நில மோசடி வழக்கு – ஊராட்சி மன்றத் தலைவரிடம் விசாரணை!
- அவன் இவன் படத்தால் இப்போது வரை பாதிக்கப்படும் விஷால் – அதனால் பாதிக்கப்படும் தயாரிப்பாளர்கள்!
நடிகையுடன் ரகசிய உறவு...? விஷால் திருமணம் நின்றுபோனதற்கு இது தான் காரணம்!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் , தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலாளராகவும் இருந்த விஷால், நடிகர் சங்கத்தின் கட்டிடம் முடித்த பிறகுதான் திருமணம் செய்துக்கொள்ளப் போவதாக தெரிவித்திருந்தார். இதற்கிடையில் கடந்த மார்ச் மாதம் ஹைதராபாத்தைச் சேர்ந்த அனிஷா அல்லா ரெட்டி என்பவருடன் விஷாலுக்கு திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
அதையடுத்து வருகிற அக்டோபர் மாதம் திருமணம் நடைபெறவிருந்த நிலையில் இரு குடும்பத்தாரும் தீவிரமாக திருமண ஏற்பாடுகளை செய்து வந்தனர். ஆனால், தற்போது வரை இந்த திருமணம் நடைபெறவில்லை. அதைப்பற்றிய எந்த ஒரு தகவலும் வெளிவரவில்லை. கிட்ட தட்ட திருமணம் நின்று போனதாக உறுதிப்படுத்தாத தகவல்கள் வெளியாகின. அனிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஷாலுடன் இருந்த அனைத்து புகைப்படங்களையும் நீக்கினார் இதன் மூலம் திருமணம் நடக்காது என்பது தெரியவந்தது.
இந்நிலையில் தற்ப்போது நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன், விஷால் திருமணம் நின்று போனதற்கான ஷாக்கிங் தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். அதாவது விஷால் நான் சிகப்பு மனிதன் படத்தில் லட்சுமி மேனனுடன் நடித்தபோது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு காதலாக உருமாறியது. அப்போது தான் விஷால் அனிஷாவை திருமண நிச்சயம் செய்தார். லட்சுமி மேனன் தங்களுக்குள் இருக்கும் உறவின் ஆழத்தை குறித்து பேட்டி ஒன்றில் வெளிப்படையாக தெரிவித்தார். அந்த வீடியோ பார்த்துவிட்டு திருமணத்தை நிறுத்திவிட்டராம் அனிஷா. இதனை எந்த ஒரு பத்திரிக்கையும் வெளியிடவில்லை.
அடுத்த கட்டுரையில்
