செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 14 நவம்பர் 2020 (13:19 IST)

அவன் இவன் படத்தால் இப்போது வரை பாதிக்கப்படும் விஷால் – அதனால் பாதிக்கப்படும் தயாரிப்பாளர்கள்!

நடிகர் விஷால் அவன் இவன் படத்துக்காக மாறுகண் கொண்ட கதாபாத்திரத்தில் நடித்ததால் இப்போது வரை அவருக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்படுவதாக சொல்லப்படுகிறது.

விஷால் நடிப்பில் ஆனந்த ஷங்கர் இயக்கும் புதிய படத்திற்கான வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இந்த படத்தின் படப்பிடிப்புஐதராபாத்தில் நடந்து வருகிறது. இந்த படத்தில் விஷாலின் நெருங்கிய நண்பர் ஆர்யாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே இருவரும் அவன் இவன் படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர்.

அந்த படத்துக்காக விஷால் ஒரு வருடம் காலம் மாறுகண் கொண்டவராக நடித்ததில் அவருக்கு தலைவலி பிரச்சனைகள் ஏற்பட்டன. அதற்காக அவர் அப்போது சிகிச்சை எடுத்து வந்தார். ஆனால் இப்போது வரை அவருக்கு அந்த பிரச்சனை தொடர்ந்து வருவதாக சொல்லப்படுகிறது. இதனால் சமீபத்தில் அவர் படப்பிடிப்பில் ஒரு நான்கு நாட்களாக கலந்து கொள்ள முடியவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் அந்த தயாரிப்பாளருக்கு சில லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.