வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 17 ஆகஸ்ட் 2021 (20:08 IST)

தாலிபான்கள் பிடியில் பெண்கள் குழந்தைகள் - கதறி அழுத லட்சுமி ராமகிருஷ்ணன்!

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய நிலையில் தலீபான்கள் கை உயர தொடங்கியது. ஆப்கானிஸ்தானை முழுமையாக கைப்பற்றிய தலீபான்கள் நேற்று தலைநகர் காபூலையும் கைப்பற்றினர். அதை தொடர்ந்து ஆட்சியை விடுத்து தலைமறைவாகியுள்ளார் அந்நாட்டு அதிபர்.
 
இதனால் 2001 ஆம் ஆண்டிற்கு முன்பு இருந்த பெண்களுக்கு எதிரான இருண்ட காலம் மீண்டும் திரும்பி விடுமோ என்ற பயம் அனைவரின் மனதிலும் வந்து விட்டது. இதுகுறித்து தனது கருத்தினை ட்விட்டரில் பதிவிட்டுள்ள லட்சுமி ராமகிருஷ்ணன் தாலிபான்களின் பிடியில் இருக்கும் பெண்கள் குழந்தைகள் நிலையை நினைத்தால் மிகவும் கொடுமையாக இருக்கிறது.

அங்கிருந்து உயிர் தப்ப அமெரிக்காவின் விமானத்தை நோக்கி ஓடிய மக்களை நினைத்தால் மனம் மிகவும் வேதனையாக இருக்கிறது. மேலும் விமானத்தின் டயரை பிடித்து தொங்கிய 2 பேர் பலியானது மனதை ரணமாக்கியது . கதறி அழணும் போல் இருக்கிறது. இதற்கு ஐநா நல்ல முடிவு எடுக்க வேண்டும் என ஆதங்கத்துடன் கருத்தினை பதிவு செய்துள்ளார்.