1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva

இலங்கையை வீழ்த்தியது ஜிம்பாவே: இலங்கை வீரரின் சதம் வீண்!

இலங்கையை வீழ்த்தியது ஜிம்பாவே: இலங்கை வீரரின் சதம் வீண்!
இலங்கை மற்றும் ஜிம்பாவே கிரிக்கெட் அணிகளுக்கு இடையே ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெற்று வரும் நிலையில் நேற்று நடைபெற்ற 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஜிம்பாப்வே அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது 
 
நேற்றைய போட்டியில் ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்து 8 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்கள் குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இலங்கை அணி 303 என்ற இலக்கை நோக்கி விளையாடி நிலையில் அந்த அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 280 ரன்கள் மட்டுமே எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை அணியின் சனகா 102 ரன்கள் எடுத்த போதிலும் அந்த அணி தோல்வி அடைந்தது 
 
இந்த நிலையில் இந்த தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இரு அணிகளுக்கும் இடையிலான 3வது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஜனவரி 21-ஆம் தேதி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது