செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 18 ஜனவரி 2022 (09:38 IST)

கேப்டன் பதவி கொடுத்தால் ஏற்று கொள்வேன்: பும்ரா அறிவிப்பு

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியை கொடுத்தால் அதை ஏற்றுக் கொள்வேன் என பும்ரா நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து சமீபத்தில் விராட்கோலி விலகினார் என்பது தெரிந்ததே. இதனை அடுத்து இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது
 
இந்த நிலையில் ரோகித் சர்மா கேப்டன் ஆகலாம் என்றும் அதேபோல் கேப்டன் பதவிக்கு கே.எல்.ராகுலுக்கும் வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த பிரபல பந்துவீச்சாளர் பும்ரா வருங்காலத்தில் இந்திய கிரிக்கெட் அணிக்கு தலைமை தாங்கும் வாய்ப்பு கிடைத்தால் அதை கவுரவமாக ஏற்றுக் கொள்வேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
மேலும் எந்த ஒரு வீரரும் இந்திய அணியின் கேப்டன் பதவியை வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள் என்றும் அதில் நானும் விதிவிலக்கல்ல என்று பும்ரா கூறியுள்ளார். இதனை அடுத்து இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவி பும்ராவுக்கு செல்லுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்