1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 10 பிப்ரவரி 2020 (07:39 IST)

யாஷாவி ஜெய்ஸ்வால் – உலகக்கோப்பையின் நம்பிக்கை நட்சத்திரம் !

உலகக்கோப்பையின் தொடர் நாயகன் விருதுடன் ஜெய்ஸ்வால்

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய அணி அதிர்ச்சி தோல்வி அடைந்ததை அடுத்து வங்கதேச அணி சாம்பியன் பட்டம் வென்றது.

கடந்த ஒருமாதமாக தென் ஆப்பிரிக்காவில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை போட்டிகள் நடந்து வந்தன. இதில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி நேற்று வங்கதேசத்திடம் 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோற்று 5 ஆவது முறையாக கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்தது.

இந்நிலையில் இந்த தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடி இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவாகியுள்ள யாஷாவி ஜெய்ஸ்வால். இந்த தொடரில் தனியாக 400 ரன்களை சேர்த்த அவர் இறுதிப் போட்டியில் மற்ற அனைத்து வீரர்களும் சொதப்ப 88 ரன்களை சேர்த்தார். கிட்டதட்ட இது அணியின் ஸ்கோரைல் பாதியாகும். இதையடுத்து அவர் தொடர் நாயகன் விருதைப் பெற்றார்.

இவரின் ஆட்டத்தைப் பார்த்து வியந்த ரசிகர்கள் நமக்கு இன்னொரு கோலி கிடைத்துவிட்டார் என மகிழ்ச்சியடைந்துள்ளனர்.