வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 10 பிப்ரவரி 2020 (05:47 IST)

உலக கோப்பை கிரிக்கெட்: இந்தியா அதிர்ச்சி தோல்வி

உலக கோப்பை கிரிக்கெட்: இந்தியா அதிர்ச்சி தோல்வி
19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய அணி அதிர்ச்சி தோல்வி அடைந்ததை அடுத்து வங்கதேச அணி சாம்பியன் பட்டம் வென்றது 
 
நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய இந்திய அணி 177 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஜெய்ஸ்வால் 88 ரன்கள் எடுத்தார்
 
இதனை அடுத்து 178 ரன்களை இலக்காக கொண்டு விளையாடிய வங்கதேச அணி 163 ரன்கள் எடுத்திருந்த நிலையில் திடீரென மழையால் ஆட்டம் தடைபட்டது. இதனையடுத்து வங்கதேச 170 ரன்கள் இலக்காக மாற்றப்பட்டது 
 
அந்த அணி 7 விக்கெட் இழப்பிற்கு 42.1 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதனால் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றது வங்கதேச அணி 
 
முதல் முதலாக சாம்பியன் பட்டம் வென்ற வங்கதேச அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது