1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 9 பிப்ரவரி 2020 (17:45 IST)

உலகக்கோப்பை இறுதி ஆட்டம் – வங்கதேசத்துக்கு 179 ரன்கள் இலக்கு !

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால்

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி 178 ரன்கள் சேர்த்துள்ளது.

தென்னாப்பிரிக்காவில் பாஸஸ்ட்ரூம் நகரில் நடந்து வருகின்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இன்று இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதுகின்றன. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் தவிர மற்ற அனைவரும் சொதப்பினர். இதனால் ஆட்டம் தொடக்கம் முதலே வங்கதேச பவுலர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. இதையடுத்து இந்தியா 47.1 ஓவரில் 177 ரன்கள் சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. ஜெய்ஸ்வால் மட்டும் அதிகபட்சமாக 88 ரன்கள் சேர்த்தார். 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு வங்கதேச அணி ஆடி வருகிறது.