வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 9 பிப்ரவரி 2020 (14:13 IST)

இந்தியாவில் 20 லட்சம் ஏடிஎம் நெட்வொர்க்: ஃபோன்பே அதிரடி

இந்தியாவில் 20 லட்சம் ஏடிஎம் நெட்வொர்க்: ஃபோன்பே
பே-டிஎம், அமேசான் பே, கூகுள் பே போன்ற பல நிறுவனங்கள் டிஜிட்டல் பரிவர்த்தனை சேவையை வழங்கி வரும் நிலையில் ஃபோன்பே நிறுவனம் தங்கள் வாடிக்கையாளர்களுக்காக புதிய சேவையாக ஏடிஎம் சேவையை வழங்கயிருப்பதாக அறிவித்துள்ளது.
 
இதன்படி இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியா முழுவதும் சுமார் 20 லட்சம் ஏடிஎம் நெட்வொர்க்கை உருவாக்க உள்ளதாக போன்பே நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி, வாடிக்கையாளர் ஒருவர் போன்பே சேவையை பயன்படுத்தும் வணிகரிடம் சென்று ஃபோன்பே ஆப் மூலம் பணத்தை அனுப்பி விட்டு அவரிடம் இருந்து அதற்கு ஈடான தொகையை ரொக்கமாகப் பெற்று கொள்ளலாம். இதற்காக கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை. அதுமட்டுமின்றி ஒருநாளைக்கு அதிகபட்சமாக எவ்வளவு பணம் வேண்டுமானாலும் அனுப்பி கொள்ளலாம் என்றும் இருப்பினும் இந்த தொகை அவரவர் பயன்படுத்தும் வங்கி விதிமுறையைப் பொறுத்து அமையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
சில நேரங்களில் வங்கி ஏடிஎம்களில் பணம் இல்லாமல் வாடிக்கையாளர்கள் ஏமாற்றம் கொள்ளும் நேரங்களில் இதுபோன்ற வசதி மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். பே-டிஎம், அமேசான் பே, கூகுள் பே போன்ற பிற டிஜிட்டல் பரிவர்த்தனை சேவை நிறுவனங்களில் இல்லாத இந்த சேவையால் ஃபோன்பே நிறுவனத்திற்கு வாடிக்கையாளர்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இதே சேவையை  பே-டிஎம், அமேசான் பே, கூகுள் பே போன்ற நிறுவனங்களும் விரைவில் கொண்டு வர வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது