ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 7 நவம்பர் 2021 (18:49 IST)

ஆப்கானிஸ்தான் தோல்வியால் இந்தியாவின் அரையிறுதி கனவு கலைந்தது!

ஆப்கானிஸ்தான் தோல்வியால் இந்தியாவின் அரையிறுதி கனவு கலைந்தது!
நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது 
 
ஆப்கானிஸ்தான் அணி தோல்வி அடைந்ததால் இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பு பறிபோனது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியி முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 124 ரன்கள் எடுத்த நிலையில் நியூசிலாந்து அணி 18.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
 
தற்போதைய நிலவரப்படி நியூஸிலாந்து அணி ரன்ரேட் அடிப்படையில் முதல் இடத்திலும் பாகிஸ்தான் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளதால் அரையிறுதி வாய்ப்பை இழந்தது என்பது குறிப்பிடத்தக்கது