1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Chris gayle talked about retirement

இன்னும் ஒரு உலகக்கோப்பையில் விளையாட ஆசை… கிறிஸ் கெய்ல் அறிவிப்பு!

உலகக்கோப்பை
வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்ல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதாக செய்திகள் வெளியாகின.

வெஸ்ட் இண்டீஸ் டி 20 ஜாம்பவான் பேட்ஸ்மேனான யூனிவர்சல் பாஸ் கிறிஸ் கெய்ல் நேற்றைய போட்டியோடு சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதாக தகவல்கள் வெளியாகின. இந்த உலகக்கோப்பை தொடரில் அவர் மிக மோசமான ஆட்டத்தைதான் வெளிப்படுத்தி வந்தார்.

ஓய்வு பற்றி பேசியுள்ள கெய்ல் ‘சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து நான் இப்போது ஓய்வு பெறப்போவதில்லை. இந்த உலகக்கோப்பை எனக்கு மிக மோசமானதாக அமைந்தது. நிர்வாகிகள் வாய்ப்பளித்தால் இன்னும் ஒரு உலகக் கோப்பை தொடர் கூட விளையாடுவேன். ஆனால் நிர்வாகிகள் அதை செய்வார்கள் என நான் நினைக்கவில்லை. முதல் போட்டியின் போதே எனது தந்தைக்கு உடல்நலம் சரியில்லாமல் போனது. ஆனால் நான் அங்கு செல்லாமல் போட்டியில் கவனம் செலுத்தினேன். ’ எனக் கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
டிராவிட் பதவியில் விவிஎஸ் லட்சுமணன்?