திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 7 நவம்பர் 2021 (16:03 IST)

அடுத்தடுத்து 3 விக்கெட்களை இழந்த ஆப்கானிஸ்தான்… இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சி!

ஆப்கானிஸ்தான் மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி சற்று முன்னர் தொடங்கியுள்ளது.

இந்திய அணி அரையிறுதிக்கு செல்ல ஒரே ஒரு வாய்ப்புதான் உள்ளது. அது என்னவென்றால் ஆப்கானிஸ்தான் மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையே இன்று நடக்கும்  போட்டியில் ஆப்கான் அணி வெற்றி பெற வேண்டும். அதனால் இந்த போட்டியை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் வழி மேல் விழிவைத்து காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் சற்று முன்னர் தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் முகமது நபி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது. பவர்ப்ளே முடிவில் 23 ரன்கள் மட்டுமே சேர்த்து 3 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது.