வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 28 நவம்பர் 2022 (07:44 IST)

உலகக்கோப்பை கால்பந்து: குரோஷியாவிடம் கனடா பரிதாப தோல்வி

crotia
உலகக்கோப்பை கால்பந்து: குரோஷியாவிடம் கனடா பரிதாப தோல்வி
உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த சில நாட்களாக கத்தார் நாட்டில் நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
நேற்று நடைபெற்ற நான்கு போட்டிகளில் அர்ஜென்டினா, கோஸ்டாரிகா, மொரோக்கா ஆகிய மூன்று அணிகள் அபாரமாக வெற்றி பெற்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம். 
 
இந்த நிலையில் நேற்று இரவு நடந்த மற்றொரு முக்கிய போட்டியில் கனடா மற்றும் குரோஷியா அணிகள் மோதின. குரோஷியா அணி வீரர்கள் அடுத்தடுத்து கோல் போட்டுக் கொண்டிருந்தபோது கனடா அணி வீரர்கள் கோல் போட திணறினர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இறுதியில் ஆட்டநேர முடிவில் குரோஷியா அணி நான்கு கோல்களும் கனடா அணி ஒரே ஒரு கோலும் போட்டதால் குரோஷியா அணி அபாரமாக வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
 
இன்று நான்கு போட்டிகள் நடைபெற உள்ளன அந்த நான்கு போட்டிகள் பின்வருவன
 
1. ஸ்பெயின் - ஜெர்மனி
 
2. கேமரூன் - செர்பியா
 
3. தென்கொரியா - கானா
 
4. பிரேசில் - சுவிட்சர்லாந்து
 
Edited by Siva