1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 26 நவம்பர் 2022 (08:57 IST)

ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசு! சவுதி வீரர்களுக்கு அடித்த லக்!

Rolls Royce
ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜெண்டினாவை வீழ்த்திய சவுதி வீரர்களுக்கு ரோல்ஸ் ராய்ஸ் காரை பரிசாக அளிக்க உள்ளார் சவுதி மன்னர்.

கத்தாரில் நடைபெற்று வரும் ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் கடந்த 22ம் தேதி நடைபெற்ற போட்டியில் சவுதி அரேபியா – அர்ஜெண்டினா அணிகள் மோதின. இந்த போட்டியில் சவுதி அரேபியா அணி அர்ஜெண்டினாவை 1-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக சவுதியில் அடுத்த நாள் தேசிய விடுமுறையை அறிவித்தார் சவுதி மன்னர் சல்மான். தற்போது அடுத்தக்கட்டமாக அர்ஜெண்டினாவை வீழ்த்திய சவுதி அணி வீரர்களுக்கு மிகவும் காஸ்ட்லியான ஒரு பரிசை அறிவித்துள்ளார் மன்னர்.


ஆம், அர்ஜெண்டினாவை வீழ்த்திய ஒவ்வொரு வீரருக்கும் தலா ஒரு ரோல்ஸ் ராய்ஸ் காரை பரிசாக அறிவித்துள்ளாராம் மன்னர் சல்மான். இந்திய மதிப்பில் ஒவ்வொரு காரும் ரூ.9 கோடி முதல் 11 கோடி வரை மதிப்புடையவை என கூறப்படுகிறது.

லீக் போட்டி ஒன்றில் வென்றதற்கே இவ்வளவு கொண்டாட்டம் என்றால் சூப்பர் 16, அரையிறுதி போன்றவற்றில் நுழைந்தால் என்ன பரிசு கொடுப்பாரோ சவுதி மன்னர் என ஆச்சர்யத்தில் மூழ்கியுள்ளார்களாம் கால்பந்து ரசிகர்கள்.

Edit By Prasanth.K