வெள்ளி, 31 மார்ச் 2023
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated: ஞாயிறு, 27 நவம்பர் 2022 (08:41 IST)

உலகக்கோப்பை கால்பந்து போட்டி: நாக்அவுட் சுற்றுக்கு தகுதி பெற்ற அணி இதுதான்!

france
உலகக்கோப்பை கால்பந்து போட்டி: நாக்அவுட் சுற்றுக்கு தகுதி பெற்ற அணி இதுதான்!
கடந்த சில நாட்களாக கத்தார் நாட்டில் உலகக்கோப்பை கால்பந்து போட்டி  விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று நடைபெற்ற முக்கிய ஆட்டத்தில் பிரான்ஸ் மற்றும் டென்மார்க் அணிகள் மோதின. 
 
இரு அணி வீரர்களும் கோல்களை போடவும் எதிரணியின் கோல்களை தடுக்கவும் ஆவேசமாக விளையாடிய  நிலையில் ஆட்ட நேர இறுதியில் பிரான்ஸ் அணி 2 கோல்களும், டென்மார்க் அணி ஒரு கோலும் போட்டதால், பிரான்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
 
மேலும் உலக கோப்பை கால்பந்து போட்டியில் நாக்அவுட் சுற்றுக்கு தகுதி பெறும் முதல் அணியாக பிரான்ஸ் அணி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து பிரான்ஸ் அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது
 
இன்று அர்ஜென்டினா மற்றும் மெக்சிகோ இடையே நடந்த போட்டியில் அர்ஜென்டினா 2 கோல் போட்டு அபாரமாக வெற்றி பெற்றது. மெக்சிகோ கடைசி வரை கோல்கள் எதுவும் போடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேலும் இன்று ஜப்பான் மற்றும் கோஸ்டாரிகா அணிகளுக்கு இடையிலான போட்டியும் பெல்ஜியம் மற்றும் மொரோக்கோ அணிகளுக்கு இடையிலான போட்டியும் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva